×

கடையம் வனச்சரக பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை: ரூ.35ஆயிரம் அபராதம்

கடையம்: சிவசைலம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச் சரகத்திற்குட்பட்ட கடனா அணை குடியிருப்பு பகுதியில் சிவசைலம் வனக்காப்பாளர் ராஜசுப்ரியா மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கடனாநதி அணை அருகில் லாரியில் ஏற்றி வந்த மரங்களை சிலர் செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்துவந்தனர். இதுகுறித்து கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்பேரில் விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து அனுமதி மற்றும் ஆவணங்களின்றி மரங்களை வெட்டி சிவசைலம் பகுதியில் விற்பனை செய்யக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து கடையம் அருகே ராமலிங்கபுரம் பகுதியில் கோவிந்தப்பேரி பீட் வனக்காப்பாளர் பெனாசீர் ரோந்து சென்றபோது உரிய அனுமதி இன்றி அந்த வாகனத்தை மடக்கி பிடித்த போது அதில் விறகுகளை உரிய அனுமதியின்றி கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது….

The post கடையம் வனச்சரக பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை: ரூ.35ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Khadayam forest ,Khadayam ,Sivasailam forest ,Kalakadu Mundanthurai ,Kadayam forest ,Dinakaran ,
× RELATED தடையை மீறி நடைபயணம் அமர்பிரசாத்...